ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் பிடித்தம் அல்லது விடுப்புகளை கழிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனரகம் அறிவித்துள்ளது
இதுகுறித்து அந்த இயக்குனரகம் வெளியிட்ட உத்தரவு
நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கும் வகையில் பொது ஊரடங்கு நடைமுறையிலுள்ளது. அதே சமயத்தில் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத வருகை பதிவேட்டை ஆய்வு செய்ததில் அநேக பணியாளர்கள் பணிக்கு வராதது தெரியவருகிறது.
அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்கள் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளதால் அனைத்து பணியாளர்களும் அலுவலக பணிக்கு வரவேண்டும்.
தவறும் பட்சத்தில் விடுப்பு கழித்தல் அல்லது ஊதியப் பிடித்தம் போன்றவை செய்யப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...