வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள், வரும், 21ம் தேதிக்குள் பணியிடங்களுக்கு
வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.அடுத்த மாதம், 1ம் தேதி, 10ம் வகுப்புக்கு
தேர்வு துவங்குகிறது. பிளஸ் 1ல் ரத்தான பாடத் தேர்வும், பிளஸ் 2ல் சில
பாடங்களை எழுத தவறியவர்களுக்கும், மீண்டும் தேர்வு நடக்க உள்ளது.
மேலும், நடந்து முடிந்த தேர்வு விடைத்தாள்களைதிருத்தும் பணியும், வரும், 27ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக, வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் இடங்களுக்கு வர, பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.வரும், 21ம் தேதிக்குள், அவரவர் பள்ளிகளுக்குவர வேண்டும்.
பணிக்கு வருவோரில், தொற்று அறிகுறி இருந்தால்,அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சோதனை செய்ய, பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...