ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்.
ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவும் வேகம் தீவிரமாகி வருவதால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதில் சந்தேகம் நிலவுகிறது.இந்நிலையில், மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. தமிழகத்தில் கூட ஆகஸ்ட்டில் கல்வி நிலையங்களை திறக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகம் இதுவரை முடிவு எதுவும் எடுக்கவில்லை. அனைத்து கல்வி நிறுவனங்களும் திறப்பதற்கு தடை நீடிக்கிறது,' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...