இது தொடர்பாக அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளருமான ந.ரெங்கராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயதை 58லிருந்து 59 ஆக உயர்த்தப்படுகிறது என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கதக்கது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோல் மத்திய அரசின் ஓய்வு பெறும் வயது 60 என்பதை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்பது அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கைகளில் ஒன்றாகும். தற்போதுள்ள சூழ்நிலையில் வேலைக்கு காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் கூடுதல் பணி வாய்ப்புகளை உருவாக்கி உதவிட வேண்டும். காலிப்பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும்.
இவ்வாறு ந.ரெங்கராஜன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...