கரோனா பாதிப்பின் காரணமாக நடப்பு ஆண்டு நீட் தேர்வு மையங் களை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து என்டிஏ அதிகாரி கள் சிலர் கூறியதாவது: தற்போ தைய சூழலில் நீட் தேர்வை நாடு முழுவதும் ஒரேகட்டமாக நடத்துவது சவாலான காரியம். ஏனெனில், நடப்பு ஆண்டு நீட் தேர்வுக்கு 16.5 லட்சம் மாணவர் கள் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வின்போது சமூக இடை வெளியை பின்பற்றுதல் உட்பட பாதுகாப்பு அம்சங்களை கடை பிடிப்பது அவசியம். அதற்கேற்ப தேர்வு மையங்களின் எண்ணிக் கையை அதிகரிக்க திட்டமிட்டுள் ளோம். கடந்த ஆண்டு நாடு முழு வதும் 2,546 மையங்கள் அமைக் கப்பட்டன. அவற்றை கூடுமான வரை இரட்டிப்பாக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...