‘வீட்டு பாடம் என்றாலே விரோதிகளாக பார்க்கிறார்கள்’ எந்நேரமும் டி.வி.
நிகழ்ச்சிகளில் மூழ்கி கிடக்கும் குழந்தைகள்
பள்ளிகள் திறக்கப்படாத நிலையில்
வீடுகளில் எந்நேரமும் டி.வி. நிகழ்ச்சிகளில் குழந்தைகள் மூழ்கி கிடக்கிறார்கள்.
ஆன்லைன் வழியாக கல்வி கொரோனா பீதியால் உலக நாடுகள் உறைந்து கிடக்கின்றன.
கொரோனா
தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. பஸ்,
ரெயில் போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி மழலையர் பள்ளிகள்
முதல் பல்கலைக்கழகங்கள் வரை என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன.
தொடர் விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்ற வகையில் ஏராளமான
கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக வகுப்புகளை கையாண்டு வருகின்றன. வாட்ஸ்-அப் போன்ற
சமூக வலைதளங்கள் மூலமாகவும், தனி செயலிகள் (ஆப்) மூலமாக வீடியோ கால் செய்து
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள்.
மாணவர்களுக்கு தினமும்
வீட்டு பாடங்களும் வழங்கப்படுகின்றன. இந்த வீட்டு பாடங்களை மாணவர்கள் சரியாக
செய்கிறார்களா? என்று கண்காணிக்கும் பொறுப்பை பெற்றோரிடமே ஆசிரியர்கள் வழங்கி
இருக்கிறார்கள்.
டி.வி.க்கள் முன்பு சரணாகதி ஊரடங்கு சூழலில் எத்தனையோ சவால்களுக்கு
மத்தியில் குழந்தைகளை வீட்டு பாடம் செய்ய வைக்கவேண்டிய பெரும் சவாலுக்கு பெற்றோர்
ஆளாகி விடுகிறார்கள். ஆனால் இதில் பெற்றோர் தேர்ச்சி அடைவதில்லை. ஏனென்றால் தொடர்
விடுமுறை காரணமாக சுட்டி குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் மாணவர்கள் வரை அனைவரும்
டி.வி. நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகி விட்டனர்.
அடுக்கடுக்கான நகைச்சுவை தொடர்கள்,
பொழுதுபோக்கு சினிமாக்கள், கார்ட்டூன் நிகழ்ச்சிகள் என டி.வி. சேனல்களில் வகைவகையான
நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதால் டி.வி.க்களிலேயே எந்நேரமும் மூழ்கி
கிடக்கிறார்கள். இதனால் தங்களுக்கு வழங்கப்படும் வீட்டு பாடங்களை செய்ய
மாணவமாணவிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
டி.வி.க்கள் முன்பு சரணாகதி அடைந்திருக்கும்
குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்ய பெற்றோர் அழைத்தால் போதும், உடனே அவர்களின் முகம்
மாற தொடங்கிவிடுகிறது. தொடர்ந்து அவர்களை அழைத்து கொண்டிருந்தாலோ அல்லது ஒரு
கட்டத்தில் டி.வி.யை ‘ஆப்‘ செய்தாலோ ரிமோட்டை உடைத்தும் குழந்தைகள் ஆத்திரத்தை
வெளிப்படுத்துகிறார்கள். பெற்றோர் கெஞ்சி கேட்டாலும், மிரட்டி பார்த்தாலும்
வீட்டுப்பாடம் செய்ய குழந்தைகள் அடம் பிடித்து வருகிறார்கள்.
இதனால் என்னாதான்
செய்வது? என்ற குழப்பத்தில் பெற்றோர் உள்ளனர். அணையாத விளக்காக டி.வி.க்கள்
எப்படியும் வீட்டு பாடம் செய்த பக்கங்களை ஆசிரியர்களுக்கு கவனத்துக்கு தெரிவிக்க
வேண்டும் என்பதால் பெற்றோர் வேறு வழியின்றி குழந்தைகளை இழுத்து பிடித்துக்கொண்டு
வீட்டு பாடங்களை செய்ய வைக்கிறார்கள். ‘வீட்டு பாடம் செய்தால் தான் டி.வி.
போடுவேன், சாக்லெட் வாங்கி தருவேன்‘, என்றெல்லாம் பேசி குழந்தைகளை சரிகட்ட
முயற்சிக்கிறார்கள்.
குழந்தைகள் அரைகுறையாக விட்டுச்சென்ற வீட்டு பாடங்களை கூட
முழுமையாக்கி அந்த பக்கங்களை படம் பிடித்து ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழியாக
அனுப்புகிறார்கள், பெற்றோர். எந்நேரமும் அனைத்து வீடுகளிலும் அணையாத விளக்காக
டி.வி.க்கள் ஓடிக்கொண்டே இருப்பதையே பார்க்க முடிகிறது. இதனால் டி.வி. நிகழ்ச்சிகளை
கண்கள் பார்த்து கொண்டிருந்தாலும், ‘எப்படி இவர்களை வழிக்கு கொண்டு வருவது?‘, என்ற
சிந்தனையே பெற்றோர் மனதில் ஓடுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...