செய்முறை:
- விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புறப் படுத்துக் கொள்ளவும்.
- இரு கால் பாதங்களை முதுகை நோக்கி கொண்டு வந்து, கைகளை பின்னால் கொண்டு வந்து, கைகளால் காலின் கணுக்கால் பகுதியை இருக்கமாக பற்றி பிடிக்கவும்.
- தலை, மார்பு, கால்கள் ஒரு சேர உயர்த்தி, மூச்சை உள் இழுத்துத் தூக்கவும்.
- அடிவயிறு மட்டும் விரிப்பின் மீது இருக்க வேண்டும்.
- மூச்சை அடக்கி பதினைந்து வினாடிகள் இருக்கவும்.
- பின் கைகளை பிரித்து கால்களை நீட்டவும்.
- சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் செய்யவும்.
- மூன்று முறைகள் தினமும் செய்யவும்.
முக்கியக் குறிப்பு:
- கல்லிரல் வீக்கம், வயிற்று புண் உள்ளவர்கள் இவ்வாசனத்தை செய்யக்கூடாது.
- பெண்கள் கருவுற்ற சமயத்தில் செய்யக்கூடாது.
- இருதய பலவீனம், இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்யக்கூடாது.
- தனுராசனத்தின் பலன்கள்:
வயிற்று தசைகளுக்கு போதிய அழுத்தம் கிடைப்பதால் வயிற்று உள் உறுப்புக்கள் பலன் பெறுகின்றன.
- அஜீரணம், உணவு செரியாமை, மலச்சிக்கலுக்கு முழு நிவாரணம் கிடைக்கின்றது.
- உடல் எடை, தொப்பை குறையும்.
- வயிற்று பொருமல், உப்பசம், வாயு கோளாறுகள் குணமடையும்.
- முதுகுத்தண்டு பலப்படும்.
- நுரையீரல் பலப்படும். ஆஸ்துமா குணமாகும்.
- நீரிழவு குணமாகும். கணையம் ஒழுங்காக இன்சுலினை சுரக்க செய்யும்.
- கூன் முதுகு நிமிரும்.
- ரத்த ஓட்டம் சிறப்பாக செயல்படும்.
- பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் ஏற்படும் பெருத்த வயிறு குறைக்கும்.
- மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
- மாணவர்களுக்கு நியாபக சக்தி அதிகமாகும்.
- சோம்பல் நீங்கும்.
- அடிக்கடி கோபப்படும் குணத்தை மாற்றிவிடும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...