ஆடிட்டிங் படிப்பு தொடர்பாக, இந்தியாவிலேயே முதல்முறை
யாக ஆன்லைனில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
18,000 பேர் பங்கேற்றனர்.
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர் களிடையே ஆடிட்டிங் படிப்பு குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும், தென்னிந்திய பட்டயகணக்கர் (ஆடிட்டர்) அமைப்பும் 2018-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதுவரை 75,000 மாணவ, மாணவிகளிடம் ஆடிட்டிங் படிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
தற்போது கரோனா வைரஸ் பாதிப் பால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலை யில், ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர் களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இந்தியாவிலேயே முதல்முறை யாக தமிழகத்தில் நடத்தப்பட்ட இந் நிகழ்ச்சியை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்து, மாணவர்களிடையே பேசினார். இதில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மற்றும் தென்னிந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த தென்னிந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் துணைத் தலைவர் கு.ஜலபதி கூறும்போது, "சி.ஏ. பயில்வதற்கான வழிமுறைகள், பதிவு செய்யும் முறை, தேவையான மதிப்பெண், கல்விக் கட்டணம், வேலைவாய்ப்புகள் குறித்து https://youtu.be/yJ4IsxD-3KE என்ற யூடியூப் இணையதளம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. ஏறத்தாழ 18,000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்" என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...