கொரோனா' வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில், ஆசிரியர்கள், மாணவர்களிடம் தொடர்பு கொண்டபோது கிடைத்த அனுபவம், மாணவர்களின் எதிர்பார்ப்பு அறியும் வகையில், 'எப்சிஎப்எஸ்' (பெடரேஷன் ஆப் சைல்டு ப்ரண்ட்லி ஸ்கூல்) என்ற மொபைல் செயலி துவக்கப்பட்டுள்ளது.
குழந்தை நேய பள்ளிகளுக்கான கூட்டமைப்பு, மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் கூறியதாவது:ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) உடன் சேர்ந்து, மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செயலி முதல் பக்கத்தில் ஆசிரியரின் பெயர், பள்ளியின் பெயர், நகராட்சி, ஒன்றியம், மாவட்டம், தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை பதிவிட்டு செயலிக்குள் செல்லவேண்டும்.
ஊரடங்கு காலத்தில் எத்தனை சதவீத குழந்தைகளை நேரடியாக, மொபைல் போனில் தொடர்பு கொள்ள முடிந்தது; பாடம் தொடர்பான உரையாடல் ஏதேனும் நிகழ்த்த முடிந்ததா, ஆசிரியர்களிடம் குழந்தைகளின் எதிர்பார்ப்பு என்ன, தொடர்பு கொண்ட போது கிடைத்த வேறுபட்ட அனுபவம் என்ன என்றும்; பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்ற வினாக்கள் கேட்கப்பட்டுஉள்ளன.
கொரோனா குறித்த விழிப்புணர்வு, பரிசோதனை செய்வது, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி, பள்ளிகளில் சமூக இடைவெளி பின்பற்றுவது உள்ளிட்ட, 41 வகையான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதற்கு, ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட வேண்டும். ஆசிரியர்களின் கருத்துக்களை தொகுத்து, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...