இவர்களில் பலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப் பது தெரியவந்தது. இதை யடுத்து, அவர்களையும், அவர் களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும், வேப்பந் தட்டை வட்டம், பசும்பலூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தனிமைப்படுத்த நேற்று முன்தினம் இரவு சுகாதாரத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கரோனா வைரஸ் தொற்று சந்தேகம் உள்ளவர்களை பள்ளியில் தங்க வைத்தால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால்,அவர்களை அங்கு தங்க வைக்க அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தற் கொலை செய்து கொள்வதாகக் கூறி, நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வேப்பந்தட்டை வட்டாட்சியர் கவிதா, மங்கல மேடு டிஎஸ்பி தேவராஜன் தலை மையிலான போலீஸார் அங்கு சென்று பொது மக்க ளுடன் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்படவில்லை.
இதை யடுத்து அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மீது வி.களத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...