'மே மாத சம்பளம் வழங்க வேண்டும்' என, பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, மாநில ஒருங்கிணைப்பாளர், செந்தில் குமார் அறிக்கை:
ஜெயலலிதா, 2011ல், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்களை, 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமித்தார். அனைத்து மாதங்களும் சம்பளம் வழங்க, 99.29 கோடி ரூபாய் ஒதுக்கினார்.ஆனால், பணி நியமனம் செய்த பின், மே மாதம் சம்பளம் தருவதில்லை. அரசாணையில், 11 மாதங்களுக்கு மட்டும் சம்பளம் என்று குறிப்பிடாத போதும், கல்வித்துறை, ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்வது வருந்தத்தக்கது.
ஒரு மாதம் சம்பளம் இல்லாமல், அடுத்த மாதம், எப்படி குடும்பத்தை நடத்த முடியும்; தற்போது ஊரடங்கால், பகுதி நேர ஆசிரியர்கள், மிகுந்த கவலையுடன் உள்ளனர். மே மாத சம்பளம், 7,700 ரூபாய் கொடுத்தால், பெரும் உதவியாக இருக்கும்.இதற்கு, முதல்வர் நிதி ஒதுக்கி, 12 ஆயிரம் பேருக்கு, மே மாத சம்பளம் வழங்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...