சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா காரணமாக நாடு பெரும் சவாலை சந்தித்து உள்ளது. இதற்கு முன்பு இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டது இல்லை. குழந்தைகள் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகள் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் அனுபவித்து வருகிறார்கள். பெற்றோர்கள் சம்பளம், குடும்பத்தின் ஆரோக்கியம் பற்றி கவலைப்படுகிறார்கள். இந்த கடினமான நேரத்தில், பள்ளி தேர்வுகளை முடிக்க முடியாத குழந்தைகள் இன்னும் வருத்தப்படுவார்கள்.
இத்தகைய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு, அசாதாரண சூழ்நிலையின் ஒருமுறை நடவடிக்கையாக, 9 மற்றும் 11-ம் வகுப்பு ஆண்டு தேர்வுகளில் தோல்வியுற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி அடிப்படையில் மீண்டும் ஒரு தேர்வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மாணவர்களின் தேர்வுகள் முடிவடைந்ததா, முடிவுகள் வெளியிடப்பட்டதா அல்லது அவர்களின் தேர்வுகள் முடிக்கப்படவில்லையா? என எதுவும் இதில் பொருட்படுத்தப்படாது.இதற்காக பள்ளிகள் ஆன்லைன், ஆப்லைன் அல்லது புதுமையான சோதனைகளை நடத்தலாம்.
இந்த சோதனையின் அடிப்படையில் அடுத்த நிலையை தீர்மானிக்கலாம். மாணவர்கள் தோல்வியுற்றஅனைத்து பாடங்களிலும் இந்த சோதனை நடத்தப்படலாம். தேர்வை நடத்துவதற்கு முன், பள்ளிகள் மாணவர்களுக்கு போதுமான தயாரிப்பு நேரம் கொடுக்க வேண்டும். இந்த விலக்கு அனைத்து மாணவர்களுக்கும் (ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தாலும்) பொருந்தும். எதிர்காலத்தில் இது நீட்டிக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...