ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி அடிப்படையில் வகுப்புகள்: NCERT பரிந்துரை!
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தனிக்கடைகள் உள்பட பல கடைகளைத் திறக்கலாம் என்றும் மதுபான கடைகளைத் திறக்கலாம் என்று ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் கோவில்களையும் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கல்லூரிகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்க யுஜிசி பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பள்ளிகளையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி அடிப்படையில் திறக்கலாம் என்று NCERT பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50% மாணவர்கள்களுடன் பள்ளிகள் செயல்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தால் ஒருநாள் விட்டு ஒருநாள் 25 மாணவர்களை பள்ளி வரச்சொல்லி வகுப்புகளை நடத்தலாம் என்றும் என்சிஆர்டி பரிந்துரை செய்துள்ளது
இதனை அடுத்து மே 17ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் பள்ளிகள் வெகு விரைவில் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பல தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்தும் அந்தத் தேர்வு தாள்கள் திருத்தபடாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்-லைன் மற்றும் யூ டியூப் மூலம் வகுப்புகளை நடத்தவும் NCERT பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
BREAKING ஊரடங்கு முடிந்த உடன், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது தினசரி 50% மாணவர்களுடன் வகுப்புகள் செயல்பட வேண்டும்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் 50% மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்
பள்ளிக்கு வராத 50% மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் - HRDMinistry -க்கு NCERTபரிந்துரை
*தேசிய கவுன்சில் பரிந்துரை:*
"ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்" என மத்திய அரசுக்கு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு தேசிய கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
"ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...