வங்கிக் கடன்களுக்கான தவணை செலுத்துவதற்கான சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
அதில், வீடு, வாகனம்ட உள்ளிட்ட கடன்களுக்கான மாத தவணையை செலுத்துவதற்கான சலுகை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என மேலும்ட 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
ஏற்கனவே மாா்ச், ஏப்ரல் மற்றும் மே என மூன்று மாதங்கள் சலுகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...