அனைத்து பள்ளி ஆசிரியர்களும் வருகிற 21 - ந்தேதி பணிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது .
இதன் காரணமாக , தனியார் பள்ளி நிர்வாகங்களும் , தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை பணிக்கு திரும்ப சொல்லி செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர்.
அதில் , ஆசிரியர்கள் வெளி மாநிலங்கள் , மாவட்டங்களில் இருந்தால் உடனடியாக ஆன்லைனில் அனுமதி பெற்று பணிக்கு 21 - ந் தேதிக்குள் திரும்ப வேண்டும் .
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வருகைப்பதிவேடு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே அதற்கு தயாராகுங்கள் ' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த திடீர் அறிவிப்பால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் , விழிபிதுங்கி போய் இருக்கின்றனர் .
மேலும் , ஊரடங்கு காலத்தில் பொது போக்கு வரத்துக்கு தடை உள்ள நிலையில் , எப்படி பணிக்கு வருவது ? என்று புலம்பி வருகின்றனர் .
Onnumpuriyala
ReplyDelete