Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை ( மே 11) முதல் என்னென்ன கடைகள் இயங்கலாம்? தமிழக அரசு பட்டியல் வெளியீடு




தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு 24.03.2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. கடந்த 02.05.2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும் , மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும் , பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் ( நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர ) பல செயல்பாடுகள் / பணிகள் , 11.05.2020 திங்கட்கிழமை முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுவது தொடர்பாக 09.05.2020 அன்று பத்திரிக்கை செய்தி வெளியீடு எண் 325 வெளியிடப்பட்டது.

அதில் பிற தனிக்கடைகள் பிரிவில் கீழ்க்கண்ட கடைகள் திறக்கலாம். அதன் விபரம் பின்வருமாறு : 

1 ) டீக்கடைகள் ( பார்சல் மட்டும் )
2 ) பேக்கரிகள் ( பார்சல் மட்டும் )
3)உணவகங்கள் ( பார்சல் மட்டும் )
4) பூ , பழம் , காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
5) கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
6) சிமெண்ட் , ஹார்டுவேர் , சானிடரிவேர் விற்கும் கடைகள்
7) மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
8) மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
9) கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
10) வீட்டு உபயோக இயந்திரங்கள் ( House Hold Appliances ) மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
11 ) மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
12 ) கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
13) சிறிய நகைக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை )
14 ) சிறிய ஜவுளிக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை ) - ஊரக பகுதிகளில் மட்டும்
15 ) மிக்ஸி , கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
16 ) டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்
17 ) பெட்டி கடைகள்
18 ) பர்னிச்சர் கடைகள்
19 ) சாலையோர தள்ளுவண்டி கடைகள்
20 ) உலர் சலவையகங்கள்
21 ) கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
22 ) லாரி புக்கிங் சர்வீஸ்
23 ) ஜெராக்ஸ் கடைகள்

) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள் 25 ) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள் 26 ) நாட்டு மருந்து விற்பனை கடைகள் 27 ) விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள் 28 ) டைல்ஸ் கடைகள் 29 ) பெயிண்ட் கடைகள் 30 ) எலக்ட்ரிகல் கடைகள் 31 ) ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள் 32 ) நர்சரி கார்டன்கள் 33 ) மரக்கடைகள் மற்றும் பிளைவுட் ( Ply wood ) கடைகள் 34 ) மரம் அறுக்கும் கடைகள் ( Saw mills ) ( முடிதிருத்தும் நிலையங்கள் ( சலூன்கள் ) , ஸ்பா ( Spa ) மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்ககூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது . ) ஊரடங்கு தளர்வின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் / கடைகள் தொடர்ந்து இயங்கும் . மேலும் கொரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொறுத்து வருங்காலங்களில் பல்வேறு பணிகளுக்கு / கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் . மேற்குறிப்பிட்டுள்ள கடைகளின் உரிமையாளர்கள் , குளிர்சாதன வசதி இருந்தால் அதை இயக்காமல் , கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனி நபர் இடைவெளியினை பின்பற்ற அறிவுறுத்துவதோடு , கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் . மேலும் , அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் , மாநகராட்சி ஆணையாளர்களும் , காவல் துறையினர் , அரசால் அறிவுறுத்தப்பட்ட மேற்சொன்ன கடைகள் / நிறுவனங்களில் , பணியாளர்கள் / வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும் , தனிநபர் இடைவெளியை பின்பற்றப்படுவதையும் , போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும் , பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும் , அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை ( Standard Operation Procedures ) தீவிரமாக கடைபிடிப்பதையும் , கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் நோய்த் தொற்றின் பல்வேறு நடவதிவைனங்களும் எடுத்து தனியார் - அன்புடன் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் , முழு ஆதரவையும் , ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive