மேகம் என்பது என்ன என்று அறிந்து கொள்வோம். சிறு சிறு தண்ணீர் துளிகள்
மற்றும் சிறு சிறு பனிக்கட்டி படிகங்களும் பெருந்திரலாக காற்றில் மிதப்பதே
மேகம்!சிறு சிறு தண்ணீர் துளிகளும் , பனிக்கட்டி படிகங்களும் எப்படி
மேகமாக உருவாகுகிறது?? ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..ஒரு கேள்வி எழுந்தால் , அதற்கு விடை இல்லாமலா இருக்கும்.. கேளுங்கள்..
சூரியனின் வெப்பத்தை தாங்க மாட்டாமல் , நிலத்தில் இருக்கும் தண்ணீர் , கடல்
, குளம் , ஆறு ஆகியவற்றில் இருக்கும் தண்ணீர் , மரங்கள் , செடிகள் ,
கொடிகள் வெளியிடும் தண்ணீர் என்று அனைத்தும் ஆவியாகி விடுகின்றன.. இவ்வாறு
ஆவியாகும் நீரில் , சிலது , விண்ணோக்கி பயணப்படுகின்றன !
அவ்வாறு மேலெழும்பும் நீராவி , மேலே மேலே செல்ல செல்ல , குளிர்ந்து , சிறு
சிறு தண்ணீர் துளிகள் ஆகி விடுகிறது இல்லையேல் உறைந்து சிறு சிறு
பனிக்கட்டி படிகங்கள் ஆகி விடுகிறது . அவ்வாறு தண்ணீர் துளிகளாகவும் ,
பனிக்கட்டி படிகங்களாகவும் ,மாற்றம் அடைந்து விட்ட நீராவி, காற்றில்
மிதந்து கொண்டிருக்கும் தூசி படலத்தில் , ஒட்டிக் கொண்டு மேகங்களாக
உருமாறி விடுகிறது!
மேகங்களுக்கு உண்மையில் நிறம் எதுவும் கிடையாது! ஆனால் , நம் கண்ணுக்கு அவை , வெள்ளை நிறத்திலும் , சாம்பல் நிறத்திலும் காட்சி தருகின்றன. மேகங்கள் , தன்னுடைய வடிவத்தை மாற்றி கொண்டே இருக்கும்! அது ஏனெனில் , மேலெழும் வெப்ப காற்று , மேகத்தை வந்தடையும் போது , அக்காற்றின் வெப்பம் தாங்கமாட்டாமல் , மேகங்கள் சற்றே ஆவியாகி விடுகின்றன! தோற்றம் , பரிமாணம் , வடிவம் மற்றும் அமைப்பை பொறுத்து மேகங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1) ஸ்ட்ராடஸ் மேகங்கள்(Stratus Clouds) , படுக்கை விரிப்பை போன்றது.
\
2)கிமுளுஸ் மேகங்களை(Cumulus Clouds) , முகிற் கூட்டத் திரள் என்று அழகு தமிழில் சொல்வர். இவை , ஒன்றன் மேல் ஒன்றாக , அழகாக , குவிக்கப்பட்ட , திகைப்பு ஊட்டக்கூடிய வெள்ளை மேகங்கள்.இவ்வகை மேகங்கள் , சிறு சிறு தண்ணீர் துளிகளை தன்னுள்ளே கொண்டது!

மேலே குறிப்பிடப்பட்ட மூன்று வகை மேகங்களிலும் , சிறு சிறு தண்ணீர் துளிகள்
அல்லது பனிக்கட்டி படிகங்கள் தளர்வாக கட்டப்பட்டிருக்கும். அதனால் ,
இவ்வகை மேகத்தின் ஊடே , வெளிச்சம் ,சுலபமாக ஊடுருவி செல்ல முடியும்!
4)அல்டோ ஸ்ட்ராடஸ் மேகங்கள்(Alto Stratus clouds) , அழகாக விரித்த ,
வெள்ளை மற்றும் சாம்பல் நிற படுக்கை விரிப்பு போல வானத்தில் காட்சி
அளிக்கும். சில நேரங்களில் , இவ்வகை மேகம் , மிக அடர்த்தியாக இருக்கும்
காரணத்தினால் , பிரகாசிக்கும் சூரியனை , வெள்ளி போல் தகதகக்கும் , சந்திரனை
கூட மறைத்து விடும் .
5) நிம்போ ஸ்ட்ராடஸ் மேகங்கள்(Nimbo Stratus clouds), உயர் வானத்தில்
காணப்படும் மேகம். இவை குறிப்பிட்ட வடிவில் இல்லாமல் , தன் வடிவத்தை மாற்றி
கொண்டே இருக்கும் இயல்புடையது. அவை , அடர்ந்த சாம்பல் நிறத்தில் , ஒரே
விதமாக காணப்படும்.
6)கிமுளோ நிம்பஸ் மேகங்கள்(Cumulo Nimbus clouds) தான் உண்மையான மழை
மேகங்கள்! இவற்றை கார் மேகம் என்று சொல்லலாம். நல்ல கருப்பு நிறத்தில்
காட்சி அளிக்கும். இவ்வகை மேகத்தின் ஊடே , வெளிச்சம் ஊடுருவி செல்ல இயலாது!
ஏனெனில், சிறு சிறு தண்ணீர் துளிகள் அல்லது சிறு சிறு பனிக்கட்டி
படிகங்கள் , மேகத்தின் உள்ளே மிக அடர்த்தியாக கட்டப்பட்டிருக்கும்!
ஆனால் , இந்த கார் மேகம் , நம் கண்ணுக்கு புலப்படுவது போல் , நிஜமாகவே
கருப்பு வண்ணத்தில் இருக்காது . இந்த கார்மேகத்தின் மேல் , வானூர்தியில்
சென்று பார்த்தால் , உண்மை விளங்கும்! வானூர்தியில் அமர்ந்து பார்க்கும்
பொழுது , இவ்வகை கார் மேகங்கள் , பளிச் என்ற வெண்மை நிறத்தில் காட்சி
அளித்து , காண்போரை திகைப்பூட்டும்! இவ்வகை மேகத்தின் மேலே , வெளிச்சம்
பட்டு தெறிப்பதனால் ,வானூர்தியில் அமர்ந்து பார்ப்பவருக்கு வெள்ளை
நிறத்திலும் , பூமியில் நின்று பார்ப்பவருக்கு ,மழை மேகமாய் ,கருத்த
நிறத்திலும் ஒரே நேரத்தில் காட்சி அளிக்கிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...