விலங்குகளின் நிறப் பார்வையைக் கண்டறிய பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. பாலூட்டிகளில் மனிதன், மனிதக் குரங்குகள் , குரங்குகளைத் தவிர எந்த விலங்கிற்கும் நிறப் பார்வை இல்லை !
தேனீக்களுக்குச் சிவப்பு வண்ணத்தைத் தவிர மற்ற வண்ணங்களைக் கண்டறியும் திறன் உள்ளன. அவற்றுக்கு சிவப்பு வண்ணம் , பழுப்பு நிறமாக - கறுப்பு நிறமாகத் தெரிகின்றதாம்.
ஆனால் , தேனீக்கள் புற ஊதாக் கதிர்களைக் கண்டறியும் திறன் பெற்றுள்ளன! ( இப்பண்பு மனிதருக்கு இல்லை ). பறவைகளுக்கு , நிறப் பார்வை அதிகத் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. பெண் பறவைகளைக் காட்டிலும் ஆண் பறவைகள் கண்ணைக் கவரும் பல வண்ணங்களைப் பெற்றுள்ளன.
இந்த வண்ணங்கள் தம் இனப் பெண் பறவைகளை , இனச் சேர்க்கைக்குக் கவர்ந்திழுக்க உதவுகிறது. பொதுவாக , விலங்குகளுக்கு நிறப் பார்வையைவிட மோப்ப சக்தி அதிகமாக உள்ளது.
இதற்குக் காரணம் , அந்த விலங்குகள் இரவில் வேட்டையாடும் முன்னோர்களிடமிருந்து வந்ததுதான் என்று கருதுகிறார்கள்.
கால்நடைகளுக்கு நிறப் பார்வை இல்லை! குடையைக் கண்டு மிரள்வது அதன் அசைவைப் பொறுத்துத்தான் என்று கூறலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...