முதுகெலும்புள்ள உயிரிகளில் ஊர்வன வகையைச் சேர்ந்த காலற்ற உயிரி பாம்பு ஆகும். காலற்றத் தன்மையால் இதன் இடப் பெயர்ச்சிக்கு வயிற்றுப்புற செதில்களே உதவுகின்றன.
பாம்பு அவ்வப்போது இந்தச் செதில்களை புதுப்பித்துக் கொள்வதன் மூலம் நகர்ச்சி எளிதாகிறது. பாம்பு தோலுரிப்பது என்பது இத்தகைய செதில்களைப் புதுப்பித்துக் கொள்ளும் முறையே ஆகும்.
பாம்பு தன் தோலை முழுமையாக உரிப்பதில்லை. மேற்புறத் தோலான செலோஃபேன் போன்ற மேலுறைப் பகுதியைத்தான் உரித்து புதுப்பித்துக் கொள்கிறது. இச்செயல் வருடத்திற்கு பலமுறை நிகழலாம். மரங்கள் எவ்வாறு பழைய இலைகளை உதிர்த்து , புதிய செயல்திறன் மிக்க இலைகளைப் பெறுகின்றதோ அவ்வாறுதான் இந்தச் செயலும்.
பாம்பு தன் தலையின் முன் பகுதியை ஏதாவது கடினமான சுரசுரப்பான ' பரப்பின்மீது உரசித் தேய்க்கிறது. இதனால் புறத்தோலின் மேலுறை பிரிந்து கிழியும். இந்தப் பகுதியைக் கல் அல்லது செடியில் சிக்கிக் கொள்ளும்படிச் செய்து , 'பின் உடலை நெளித்து , தளர்த்தி பளபளவென வெளியே வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...