சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கணேசமூர்த்தி அவர்கள் தனது ஒருமாத ஊதியத்தை கொரானா நிவாரண பணிக்காக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கியுள்ளார்.
கணேஷ்மூர்த்தி (36), கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். போட்டித்தேர்வு மூலம் நேரடியாக கல்வி அலுவலர் பணியில் சேர்ந்த இவர், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றதில் இருந்தே, அதுவரையிலும் கல்வி அலுவலகத்தையே சுற்றி வரும் சில கூட்டங்களில் இருந்து காத தூரம் விலகியே இருந்தார்.
குறிப்பாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அரசியல் புள்ளிகள் கொண்டு வரும் சிபாரிசுகளை தயவு தாட்சண்யமின்றி புறந்தள்ளினார். அதேநேரம், தகுதி இருக்கும் பட்சத்தில் அதன்மீது உடனுக்குடன் விரைந்து செயலாற்றவும் தவறியதில்லை. சேலம் மாவட்டத்தில் இதுவரை பணியாற்றி வந்த முதன்மைக் கல்வி அலுவலர்களில் கார்மேகம், சேதுராம வர்மா ஆகியோர் நேர்மையான நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர்களாக இருந்தனர். அந்த வரிசையில் கணேஷ்மூர்த்திக்கும் இடமளித்து இருந்தனர் ஆசிரியர்கள்.
சொல்லப்போனால் அவர்களைக் காட்டிலும், கணேஷ்மூர்த்தி ரொம்பவே முரட்டுத்தனமான நேர்மையாளராக இருந்தார் என்கிறார்கள் ஆசிரியர்கள். ஆய்வுக்குச் செல்லும் பள்ளிகளில் மரியாதை நிமித்தமாகப் போர்த்தப்படும் சால்வைகள், எலுமிச்சம்பழம் உள்ளிட்ட இத்யாதிகளைக்கூட அவர் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்வதில்லை. அவர் பொட்டலம் கட்டிக்கொண்டு கையோடு கொண்டு செல்லும் உணவைத்தான் சாப்பிடுவார் என்கிறார்கள்.
தேசிய பேரிடர் காலங்களில் கல்வித் துறை நாட்டு மக்களின் துயர் துடைக்க பக்கபலமாக நிற்கும் என்பதை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கணேசமூர்த்தி அவர்கள் நிரூபித்து உள்ளார்.
பார்க்க கடுமையானவர் பழக இனிமையானவர் சீர்திருத்த எண்ணம் வலுவாக கொண்டவர் கொரானா பணியில் இளையோர் செஞ்சிலுவை சங்க ஆலோசகர்களை கொண்டு மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் உழவர் சந்தைகளிலும் ,ஈ பாஸ் வழங்கும் இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி அருமையான பணியாற்றியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...