கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன . 10 மற்றும் 12 ஆம் வகுப்பு உட்பட சில தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன .
இதனிடையே , தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது . மேலும் 10 வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
ஆனால் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் என முதலமைச்சர் உறுதியாக தெரிவித்தார் . மேலும் , எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்பது கொடர்பாக ஒரு குழு அமைத்து , ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்நிலையில் , பொது முடக்கம் முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது . போதிய கால அவகாசம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது .
But india Today tells that students will be promoted to 11th by their internal marks
ReplyDelete