அமெரிக்காவில் வைரஸ் தொற்று
உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தொட்டுவிட்டது. இந்நிலையில் மக்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் சிக்கலாக இருக்கும். இதுவரை நம் வரலாற்றில் சந்தித்து இருக்காத மிகவும் மோசமான காலமாக இது இருக்கும். உயிர் பலியை குறைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த நேரத்தில் பொய் செய்தி, புரளி உள்ளிட்டவற்றைக் கிளப்ப வேண்டாம் என டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய மகன் பாரோன் (14) வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாகவும் விளையாட்டு வீரனான அவனுக்கு வீட்டில் முடங்குவது சிரமம் எனவும் தெரிவித்தார். இதேபோல அமெரிக்கர்கள் அனைவரும் சிறிது காலம் முடங்கினால் கொரோனாவை ஒழித்துவிடலாம் என்றார்.அமெரிக்காவின் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பதால் வென்டிலேட்டர் கருவி தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் அமெரிக்க மாநில கவர்னர்கள் பலர் டிரம்பிடம் கூடுதல் வென்டிலேட்டர்கள் கிடைக்க உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த புதனன்று அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ பொருட்களை கப்பல் மூலமாகப் பெற்றது. இதில் நியூ யார்க் மருத்துவமனைகளுக்கு அளிக்க வெண்டிலேட்டர்களும் பெறப்பட்டன.அவென்டா - எம் என்ற மூச்சுவிடும் எந்திர அபேரட்டஸ் அமெரிக்காவுக்கு ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.ரோஸ்டாக் என்கிற ரஷ்ய நிறுவனத்தில், சப்சிடரி நிறுவனம் இந்த வகை வென்டிலேட்டரை தயாரித்தது. 2014ம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கு பணம் ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. அதில் குளறுபடி ஏற்பட்டதால் தற்போது ரோஸ்டாக் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க நிறுவனங்கள் தொழிலில் ஈடுபட முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக வென்டிலெட்டர்கள் சப்ளையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...