கொரோனா தொற்று சூழலை பொறுத்து தான், பள்ளிகள் திறப்பு முடிவு செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நேற்று அவர் கூறியதாவது:ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், 10ம்வகுப்புக்கு பொது தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தற்போதைய சூழலில், விடைத்தாள்கள் திருத்த முடியாத நிலை உள்ளது.விடைத்தாள் திருத்தும் மையத்தில், 200 முதல், 300 ஆசிரியர்கள், ஒரே இடத்தில் குவிய வேண்டியிருக்கும். இதனால், ஆசிரியர்கள் வெளியே நடமாட வேண்டிய சூழல் ஏற்படும். தற்போதைய ஊரடங்கு உத்தரவு சூழலில், எவரும் வெளியே நடமாடக்கூடாது.
வழக்கமான காலங்களில், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். அதனால், இன்னும் நமக்கு கால அவகாசம் உள்ளது. கொரோனா தொற்று சூழலை பொறுத்து தான், பள்ளிகள் திறப்பு முடிவு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...