Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரே ஒரு பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ்!! மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்!


எவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.
எண்ணற்ற பருத்துவ குணங்களை கொண்ட ஆவாரம் பூ- வின் மருத்துவகுணங்கள் தெரிந்தால் நீங்கள் தான் பாக்கியசாலி. வறண்ட தரிசு நிலங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் அழகை பார்க்கும்போது கவிதை எழுதத்தெரியாத நபர்களுக்கே கவிதை வந்து கொட்டும்.

பொதுவாக ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நோய்களை குணப்படுத்தும் என கூறுவார்கள்.
ஆனால் இந்த ஆவாரைப்பஞ்சாங்கத்தை தினம் ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய், உடல் சோர்வு, அடங்காத தாகம், தூக்கம் இன்மை உடல் இளைத்தல் இவை அனைத்திற்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
குழந்தையின்மை பிரச்னை உள்ள பெ‌ண்க‌ள் கருப்பட்டியுடன் ஆவாரம் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.
உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.

தோல் அரிப்பு ஏற்பட்டால் ஆவாரம் பூவினை அரைத்து வெந்நீர் கலந்து அதை உடம்பில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவரம் பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும்.
ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைது இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive