கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கை மேலும்நீட்டிப்பது
குறித்து, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.கொரோனா வைரஸ்
பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், மார்ச், 25 முதல் நாடு முழுதும், 21
நாள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது.
இதன் காரணமாக, கொரோனா வைரஸ் பரவுதல் வேகம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் நிலையில், மிகக்குறைவாகவே உள்ளது. எனவே, ஏப்., 14ம் தேதிமுடிவுக்கு வரும் ஊரடங்கை, மேலும் நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு மாநில அரசுகள் மற்றும் நோய் தடுப்புத்துறை நிபுணர்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அவர்களின் கோரிக்கை தொடர்பாக, மத்திய அரசு தீவிர ஆலோசனைநடத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என, அதிகாரிகள் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
பதுக்கலை தடுக்க நடவடிக்கை
கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக, பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை பதுக்குதல் மற்றும் கறுப்பு சந்தையில் விற்பனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, உள்துறை இணை செயலர், புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறும்போது, ''பதுக்கல், கறுப்பு சந்தை விற்பனை ஆகியவற்றின் மீது, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ''மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், உரிய இடங்களை சென்றடைவது கண்காணிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் நிலை திருப்தியாக உள்ளது,'' என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...