'கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் மாணவர் சேர்க்கை தொடர்பாக, அடுத்த வாரம் உரிய அறிவிப்பு வெளியிடப்படும்' என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
ஊரடங்கால், நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நுழைவு தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.பல மாநிலங்களில்,பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படாமல், பல பாடங்களுக்கான் தேர்வுகள் பாக்கி உள்ளன. இதனால், உயர்கல்வி நிறுவனங்களில், ஜூலையில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாத சூழல் உள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்ய, இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ' துணைவேந்தர், நாகேஸ்வர ராவ் தலைமையில் ஒரு குழுவும், ஹரியானா மத்திய பல்கலை துணைவேந்தர், ஆர்.சி.குகத் தலைமையில், மற்றொரு குழுவும்அமைக்கப்பட்டது.இந்த குழுக்கள், பல்வேறு தரப்பிலும் உரிய ஆலோசனை மேற்கொண்டு, நேற்று முன்தினம், யு.ஜி.சி.,யிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளன. அதில், 'செப்டம்பரில் மாணவர் சேர்க்கையை நடத்தலாம்' என, பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு, யு.ஜி.சி., அளித்துள்ள விளக்கம்:
யு.ஜி.சி., அமைத்தநிபுணர் குழுவினர், உரிய ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து, யு.ஜி.சி.,யின் கமிஷன் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.அதன்பின், ஊரடங்கு நிலவரம் அடிப்படையில் முடிவு மேற்கொள்ளப்படும். உரிய அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும்.இவ்வாறு, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...