நியூயார்க்: .சிறுவர்களுக்காக மெசஞ்சர் செயலி... பேஸ்புக் நிறுவனம் சிறுவர்களுக்கென பிரத்யேகமாக மெசஞ்சர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் கிட்ஸ் செயலி தற்சமயம் உலகின் 70-க்கும் அதிகமான நாடுகளில் வெளியிடப்படுகிறது. மெசஞ்சர் கிட்ஸ் செயலியில் முன்பை விட அதிக வசதிகள் மற்றும் பெற்றோர் கட்டுப்படுத்த பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது
இதனால் செயலியில் புதிய நண்பர்களை சேர்ப்பது, குழுக்களில் இணைவது மற்றும் ப்ரோஃபைலை யார் யார் பார்க்க முடியும் உள்ளிட்டவற்றை பெற்றோர்களே தீர்மானிக்க முடியும். முந்தைய பதிப்புகளில் சிறுவர்களுக்கு வரும் ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் மற்றும் அவற்றை ஏற்பது உள்ளிட்டவற்றை பெற்றோர்கள் கண்காணிக்கும் வசதி வழங்கப்பட்டு இருந்தது.
புதிய செயலியில் சூப்பர்வைஸ்டு ஃப்ரெண்டிங் எனும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு சிறுவர்களின் ஃப்ரெண்ட் லிஸ்ட் அதாவது நண்பர்கள் பட்டியலில் பெற்றோர் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்களை செய்யலாம். சிறுவர்களுக்கு ரிக்வஸ் வரும் போது பெற்றோருக்கும் அதற்கான நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படுகிறது.
இத்துடன் மெசஞ்சர் கிட்ஸ் செயலியில் சிறுவர்களின் ப்ரோஃபைலை நண்பர் பரிந்துரைக்காக யார் யார் பார்க்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் தீர்மானிக்க முடியும். பெற்றோர்கள் சிறுவர்களின் பெயர் மற்றும் ப்ரோஃபைல் புகைப்படம் சிறுவரின் நண்பர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோரின் ஃபேஸ்புக் நண்பர்கள் என யார் யாருக்கு தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்ய முடியும்.
அமெரிக்காவில் ஏற்கனவே வெளியிடப்பட்ட மெசஞ்சர் கிட்ஸ் செயலியில் புதிய அம்சத்திற்கான அப்டேட் வெளியிடப்பட்டு சர்வதேச சந்தையில் வரும் வாரங்களில் இந்த செயலி வெளியிடப்படுகிறது. மெசஞ்சர் கிட்ஸ் செயலி ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...