வாட்சாப்பில், நாம் பேசுவதை எழுத்துகளாக்கி அனுப்பும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு நமது செல்பேசியில் கூகுள் ப்ளேஸ்டோரைத் திறந்து அதில் GBoard தேர்வு செய்யவும். பின்னர் அதனை நிறுவவும். ஒரு விண்டோ திறக்கும். வாட்சாப்பைத் திறந்து தகவல் அனுப்ப வேண்டியவரின் பெயரை தேர்வு செய்யவும். தகவல் உள்ளிடும் பகுதியை தேர்வு செய்யவும். இப்போது மைக் ஐகான் கிடைக்கும். பெரியதாக பச்சை நிறத்தில் உள்ள மைக் அல்ல. சிறியதாக நீலநிறத்தில் உள்ள மைக்கினை தேர்வு செய்யவும்.
வரும் விண்டோவில் செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். கிடைக்கும் விண்டோவில் Language தேர்வு செய்யவும். அதில் நிறைய மொழிகள் கொடுத்து இருப்பார்கள் அதில் தேர்வாகி உள்ள ஆங்கிலத்தினை அன்லாக் செய்திடவும் ஸ்க்ரோல் செய்து கீழே வரவும்.
தமழ் என்பதில் இந்தியாவினை தேர்வு செய்து பின்னர் கீழே உள்ள சேவ் கிளிக் செய்யவும். இப்போது மீண்டும் முன்பு சொன்னது போல தட்டச்சு பகுதியை தேர்வு செய்து மைக்கில் நாம் அனுப்ப விரும்பும் செய்தியை தமிழில் பேசவும். நீங்கள் பேசப்பேச அது தட்டச்சு செய்யப்பட்ட உரையாக மாறுவதைக் காணலாம். அதனை நாம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு அனுப்பலாம். இதேபோல நீங்கள் நோட்பேடினையும் ப்ளே ஸ்டோரில் திறந்து இதே போல தமிழில் பேசி அதை எழுத்துகளாக்கி மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். பயன்படுத்துங்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...