கதிரவனின் புறப்பரப்பில் அவ்வப்போது கருந்திட்டுகள்
உண்டாகின்றன. அவை சிறு கூட்டங்களாகப் பார்ப்பதற்கு புள்ளிகள் போல்
தோற்றமளிக்கின்றன. இவற்றிற்கு கதிரவப்புள்ளிகள் ( sun spots ) எனப் பெயர்.
இந்தக் கதிரவப் புள்ளிகள் உள்ள பகுதி சற்றுக் குளிர்ந்து அதன் வெப்பநிலை
சுமார் 4000° செல்ஷியஸ் அளவில் இருக்கும். மற்ற பகுதிகளின் சராசா வெப்பநிலை
6000° செல்ஷியஸ்.
இந்தக் கதிரவப் புள்ளிகளின் மையப் பகுதி கறுத்தும் வெளிச் செல்லச் செல்ல கறுமை குறைந்தும் காணப்படுகின்றன. 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவற்றின் எண்ணிக்கை உச்சத்தை அடைகின்றன. இதன் விளைவாக பூமியின் துருவப் பகுதிகளில் சிலசமயம் ' துருவ ஒளி ' ஏற்படுவது உண்டு. வானொலி தகவல் தொடர்பும் சில மணித்துளிகள் இதனால் பாதிப்படைவது உண்டு.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...