கொரோனா வைரஸ் எதிரொலி !
பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பகுதிநேர ஆசிரியர்கள்
கூட்டமைப்பு பாராட்டு !
தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் !
கொரோனா வைரஸ் பேரழிவில் இந்திய மக்களை பாதுகாக்க சிறப்பாக நடவடிக்கை
எடுத்துவரும் பாரதப்பிரதமர் மோடி அவர்கள் பாடுபட்டு வருகிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் தமிழ்நாட்டு மக்களை
பாதுகாக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு மக்களோடு மக்களாக செயல்பட்டு
வருகிறார்.
இந்த மனிதநேய நடவடிக்கைகளை பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டடைப்பு பாராட்டி வருகிறது.
இது .குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில
ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது :-
கொரோனா வைரஸ் உலகஅளவில் மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இந்திய மக்களை பாதுகாக்க பாரத பிரதமர் மோடி
அவர்கள் துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் பெரும் அழிவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அவர்கள் கொடிய நோய் பரவாமல் தடுக்க
அனைத்து மாநில முதல்வருக்கும் தேவையான நிதியும் வழங்கி உதவி வருகிறார்.
இது மிகவும் பாராட்டத்தக்கது.
தமிழக முதல்வர் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் “ எனக்கு மக்கள் நலன்
தான் முக்கியம் அடுத்து ஆட்சிக்கு வர நான் செய்யவில்லை, இந்த பழனிச்சாமி
அம்மாவை போல் மக்களை பாதுகாத்தார் என்று மக்களின் மனதில் இடம் பெற்றாலே
போதும் என முதல்வர் எடப்பாடியார் “ அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி இந்த
கொடிய நோய் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தமிழக மக்கள் நலனை
கருத்தில் கொண்டு அவசரகால நடவடிக்கைகளை சிறப்புடன் கையாண்டு வருகிறார்.
கிட்டதட்ட 4ஆயிரம் கோடி அளவிற்கு நிதியும் ஒதுக்கி, மேலும் அத்தியாவசியப் பொருட்களும் மக்களுக்கு தேவையான அளவு கிடைக்க போதிய
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனை தமிழ்நாடு அனைத்து பகுதிநேர
ஆசிரியர்கள் கூட்டமைப்பு மனதார பாராட்டுகிறது
.
கொரோனா தடுப்பு பணியில் தன்னார்வலர்களாக பணியாற்ற, பொதுமக்கள் சேவையில்
ஈடுபடுத்தி கொள்ள, இந்த இக்கட்டான நேரத்தில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் விரும்புகிறோம். இதனை பள்ளிக் கல்வித்துறை நிர்வாகம் பயன்படுத்தி கொள்ளவேண்டும். ஏற்கனவே தமிழகஅரசு இதற்கான பணியை தொடங்கி உள்ளது. தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பணியை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையிலும் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் பட்டியல் தயார் செய்யும் பணி
தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
144 தடை உத்தரவு காரணமாக 21 நாட்கள் பள்ளிகள் நடைபெறாத சூழலில் பகுதிநேர
ஆசிரியர்களுக்கு சென்ற மாதமான மார்ச் மாதம் சம்பளம் எவ்வித காலதாமதமும்
இல்லாமல் விரைந்து கிடைக்க முதல்வர் அவர்கள் நேரடி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தோம்.இதனால் சம்பளம் விரைவாக வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள்
துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அதே சமயம் இன்னும் முழுமையடையவில்லை எனத் தெரிகிறது.
9 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாலும், பகுதிநேர ஆசிரியர்கள் சம்பளம் ECS
முறை என்று சொல்லப்பட்டாலும், பள்ளிமேலாண்மைகுழு மூலம் வழங்கி
வருவதால்,காலதாமதம் ஏற்பட்டு பொதுவாக எப்போதுமே ஒரு பிரச்சனையாக இருந்து
வருகிறது. எனவே 100 சதவீத அளவில் சென்ற மாத சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது என அறிக்கை மூலம் உறுதிப்படுத்த இந்த இக்கட்டான
நேரத்தில் வேண்டுகோள் வைக்கிறோம்.
மேலும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமுலில் இருப்பதால், நடப்பு ஏப்ரல்
மாதம் ஊதியம் எவ்வித தடையுமின்றி வழங்கவும் முதல்வர் உரிய உத்தரவுகளை
பள்ளிக்கல்வித்துறைக்கு பிறப்பித்து உதவிட வேண்டும்.
கடந்த 8 ஆண்டுகளின் மே மாதம் ஊதியம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு
மறுக்கப்பட்டு வருகிறது. இம்முறை இந்த சோதனையான கொரோனா பேராபத்து
காலத்தில் மே மாதம் ஊதியம் கருணையுடன் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டால்
அனைவரும் சிரமமின்றி உணவு, வாடகை போன்ற செலவுகளை மேற்கொள்ள முடியம்.
எனவே மக்கள் காவலராக உருவெடுத்து வரும் முதல்வர் அவர்கள் இந்த பகுதிநேர
ஆசிரியர்கள் கனிவான கோரிக்கையினை கவனிக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்புக்கு
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் நம்பர் 9487257203
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...