பேரிடர் கால உதவியாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளத்தை அரசு
கொடுக்க முதல்வர் ஆணையிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர
ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்
முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செந்தில்குமார் கூறியது :-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 26-8-2011 சட்டசபையில் 110 விதியின்
கீழ் 16549 பகுதிநேர ஆசிரியர்களை ₹5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்க
அறிவிப்பு செய்தார்.
இதற்காக ஆண்டிற்கு அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் வழங்க ₹99 கோடியே 29 லட்சம் நிதி ஒதுக்கினார்.
ஆனால் நியமனம் செய்த பின்னர் மே மாதம் சம்பளம் தருவதில்லை.
இப்படியே மே மாதம் சம்பளம் கொடுக்காமல் 8 ஆண்டுகள் முடிந்து விட்டது.
இந்தமுறை கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் நிலை கவலையுடன் உள்ளது.
இந்த கஷ்டமான நேரத்தில் மே மாதம் சம்பளம் ₹7700 கொடுத்தால் பேருதவியாக இருக்கும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நியமனம் செய்த 16549 பேரில், தற்போதுள்ள 12ஆயிரம்
பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களை காப்பாற்ற, இந்தமுறை ஒருமாதம் சம்பளமான
₹7700ஐ மே மாதம் சம்பளத்தை கொடுத்து பேருதவி செய்திட முதல்வர் ஐயா அவர்கள்
ஆணையிட வேண்டும். என்றார்.
தொடர்புக்கு
சி. செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் 9487257203.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...