மாநில வாரியாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பு மொத்தமாக 23,073 ஆக உள்ளது. 4,749 பேர் குணமடைந்துள்ள நிலையில் 718 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 6,427 ஆக உயர்ந்துள்ள நிலையில் 283 பேர் உயிரிழந்துள்ளனர். 283 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தொடர்ந்து டெல்லியில் 2,376 பேரும், குஜராத்தில் 2,624 பேரும், ராஜஸ்தானில் 1,734 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,659 ஆக உள்ளது. தமிழகம் 1,683 பாதிப்பு எண்ணிக்கையுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், மாநில வாரியாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு... கோவாவில் 100% பேர் குணமடைந்துள்ளனர்.
கேரளாவில் தொற்று எண்ணிக்கை 500ஐ நெருங்கும் நிலையில், அதில் 75% பேர் குணமடைந்துள்ளனர். ஹரியானாவில் 53%, தமிழகத்தில் 40% பேரும் குணமடைந்துள்ளனர், ஒடிசாவில் 38%, டெல்லியில் 32 மற்றும் கர்நாடகாவில் 30% பேரும் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...