மாற்றுத் திறனாளிகள் பலர், அவர்களின் தினசரி செயல்பாட்டுக்கு உதவும் நபர்களை ஊரடங்கு உத்தரவினால் வரவழைக்க முடியவில்லை என்பது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீடுகளுக்கு வந்து அவர்கள் தெரபி போன்ற மருத்துவ உதவிகளை செய்து வந்தவர்களாகும்.எனவே மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் தெரபி போன்ற மருத்துவ உதவிகளைச் செய்யும் ‘கேர் கிவ்வர்’ என்பவர்களுக்கு போக்குவரத்துக்கான பாஸ்களை வழங்கலாம்.
அதற்கு முன்பு இதுபோன்ற நபர்களை தினசரி நம்பி, அவசர உதவிகளை நாடும் மாற்றுத் திறனாளிகளின் புகைப்படத்துடன் கூடிய கோரிக்கை மனு, தேசிய அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிக்கான சான்றிதழ் ஆகியவற்றின் நகல் போன்றவற்றை மாவட்ட கலெக்டர் அல்லது சென்னை மாநகராட்சி ஆணையருக்கு (சென்னையில் வசிப்பவர்கள்) அனுப்பி வைக்க வேண்டும்.இந்த பாஸ்களை வழங்குவதற்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள்நல அதிகாரிகள் உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...