தமிழகத்தில் ஊரடங்கினை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்குமாறு முதல்வர் இபிஎஸ்.,க்கு டாக்டர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இன்னும் 4 நாட்களில் முடிய இருக்கிறது. ஆனால், பல மாநிலங்கள் ஊரடங்கினை மேலும் நீட்டிக்க பரிந்துரைத்ததாக பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவுடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார்.அப்போது, தமிழகத்தில் ஊரடங்கினை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என டாக்டர்கள் குழு, முதல்வர் இபிஎஸ்.,க்கு பரிந்துரை செய்துள்ளது.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய டாக்டர்கள் குழுவில் இடம்பெற்ற டாக்டர் பிரதீபா கூறியதாவது:
அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது. ஏப்., 14க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.நாளை அமைச்சரவை கூட்டம் இதனிடையே, நாளை (ஏப்.,11) முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை (ஏப்.,11) ஆலோசனையில் ஈடுபடுகிறார். அதன்பின்னர், ஊரடங்கு நீட்டிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...