'கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண பணிக்கு, அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்கள், நிதி வழங்க விருப்பம் தெரிவித்தால் ஏற்கப்படும்' என,
தமிழக அரசு அறிவித்துள்ளது.
'கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண பணிக்கு, தங்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ளலாம்' என, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்தது. அதேபோல, உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களும், சம்பளத்தை வழங்க முன் வந்தனர்.
இதைத் தொடர்ந்து, தமிழக தலைமை செயலர்,சண்முகம் நேற்று பிறப்பித்த அரசாணை:அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்கள், தங்களின் ஒரு நாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களின் சம்பளத்தை, கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண பணிக்கு வழங்க முன்வந்தால், அதை அரசு ஏற்றுக் கொள்ளும்.
இது குறித்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தங்கள் விருப்பத்தை, சம்பளம் வழங்கும் அலுவலருக்கு தெரிவித்தால் மட்டுமே, அவர்கள் விரும்பும்ஊதியம், நிவாரண பணிக்கு பிடித்தம் செய்யப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின் நகல், பள்ளி கல்வி மற்றும் கல்லுாரி கல்வி இயக்குனரகங்கள் வழியாக, மாவட்ட கல்வி அதிகாரிகள், கல்லுாரி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...