Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஊரடங்கு உத்தரவால் குழந்தைகளின் படிப்பு என்ன ஆகுமோ என்ற கவலையில் இருக்கும் பெற்றோர்களுக்கு, சற்று ஆறுதல்!

comp%252Bwith%252Blady

டெல்லியில் செயல்படும் என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள குழந்தைகளுக்காக இணையதளங்களில் பல பாடப்பிரிவுகள் தொடர்புடைய பாடங்களைப் பதிவிட்டுள்ளது.

  கொரோனா ஊரடங்கு உத்தரவால் குழந்தைகளின் படிப்பு என்ன ஆகுமோ என்ற கவலையில் இருக்கும் பெற்றோர்களுக்கு, சற்று ஆறுதல் தரும் வகையில் இணையத்தில் வழங்கப்படும் ஆன்லைன் வகுப்புகள் இருந்து வருகின்றன. அந்த வகையில் இந்த விடுமுறை காலங்களில் ஆன்லைனில் நடத்தப்படும் வகுப்புகளை எப்படி பயன்படுத்துவது என விளக்குகிறார் என்சிஇஆர் டியில் (NCERT) பணியாற்றும் மொழிக்கல்வித்துறை பேராசிரியர் முனைவர் இராமானுஜம் மேகநாதன்.

ஆதரவற்ற தெருநாய்களுக்கு உணவு வழங்கும் பெண் நீதிபதி இது குறித்து அவர் கூறும்போது ""தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பள்ளிப் பாடத் திட்டத்திலுள்ள அனைத்துப் பாடங்களையும் ஒலி ஒளி (audio and audio-video) பாடங்களாக, மாற்றி ஆன்லைனில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் (MOOC based courses) நடத்தி வருகிறது.

1 e-pathshala : http://epathshala.nic.in  என்ற இணையதளத்தில், முதல் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையுள்ள எல்லா பாடங்களுக்கும் ஒலி ஒளி ( audio and audio-video) வடிவில் கிடைக்கின்றன.

 2. NCERTOFFICIAL: என்சிஇஆர்டி யின் யூடியூப் சேனலில் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தேவையான முழுமையான பாடங்கள் வீடியோ வடிவில் கிடைக்கின்றன.

 3. NROER: https://nroer.gov.in என்ற மற்றுமொரு இணையதளத்தில் அனைத்து பாடங்களுக்கான வீடியோ மற்றும் விளக்கங்கள் கிடைக்கின்றன.

 4. SWAYAM PRABHA Channel லில் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான எல்லா பாடங்களும் வகுப்பறையில் நடத்துவது போலவே ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.

இந்தச் சேனலில் ஆங்கிலம் கற்றல் மற்றும் கற்பித்தல் சம்பந்தமான பல பாடங்களும், அது சம்பந்தமான தெளிவான விளக்கங்களும் கிடைக்கின்றன.

  இதைத்தவிர, ஆசிரியர்கள்,  மாணவர்கள் மற்றும் பலரும் படித்து பயன்பெறும் வகையில் ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக உடல்நலம் மற்றும் ஆரோக்கியம், ஆக்சன் ரிசர்ச், சுற்றுச்சூழல் அறிவியல், உருது, ஆங்கிலம் கற்பித்தல் தொடர்புடைய பாடங்கள் நடத்தப்படுகின்றன.

தற்போது பள்ளிக்கல்வி பாடத்திட்டம் என்பது அகில இந்திய அளவில், சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடங்களைத் தவிர, ஒன்றாகவே உள்ளன. எனவே, என்சிஇஆர்டி வழங்கும் பாடங்கள் பள்ளி மாணவர்களுக்குப் பயனளிப்பதாக இருக்கும். இவை அனைத்துமே முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது" என்று கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive