பத்திரப்பதிவுக்கான டோக்கன் எண்ணிக்கையை குறைக்க,
ஆன்லைன் திட்டத்தில், சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.ஊரடங்கு உத்தரவு
அமலில் இருந்தாலும், வரும், 20ல் பத்திரப்பதிவு பணிகளை துவங்க, பதிவுத்துறை
தயாராகி வருகிறது.
தமிழகத்தில், மொத்தம் உள்ள, 575 சார் பதிவாளர் அலுவலகங்களில் முதற்கட்டமாக, 50 சதவீத அலுவலகங்கள், 20ம் தேதி முதல் இயங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, பணியாளர்களுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆன்லைன் பத்திரப்பதிவு இணையதளத்தில், சில மாறுதல்கள் செய்யப்பட உள்ளன. குறிப்பாக, ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில், ஒரு நாளைக்கு, 25 பத்திரங்களை மட்டுமே, பதிவுக்கு அனுமதிக்கும் வகையில், டோக்கன் எண் ஒதுக்கப்படும்.அதிலும், ஒரு மணி நேரத்துக்கு நான்கு பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்யும் வகையில், மாற்றம் செய்யப்பட உள்ளது. ஆன்லைன் பத்திரப்பதிவு இணையதளத்தில், இதற்கான மாற்றங்கள் செய்வது குறித்து, உயரதி காரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...