கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான பணம் செலவிட வேண்டி உள்ளது. இதனால், நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மத்திய அரசு, சமீபத்தில் எம்.பி.க்களின் சம்பளத்தை குறைத்ததோடு, அவர்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியையும் ரத்து செய்து இருக்கிறது. இந்த நிலையில், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருவது வழக்கம். அதாவது ஏப்ரல் மாதம் முதல் திருத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுடன் கூடிய சம்பளமும், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது.ராகுல் காந்தி கண்டனம்மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், படைவீரர்கள் ஆகியோரின் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்த மத்திய அரசின் செயல் மனிதநேயமற்றது. உணர்ச்சியற்ற செயல். கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தச் செயலை அரசு செய்துள்ளது. இதற்குப் பதிலாக புல்லட் ரயில் திட்டம், நாடாளுமன்றத்தை அழகுபடுத்தும் திட்டத்துக்கு லட்சம் கோடிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு அந்த செலவை நிறுத்தலாம்' எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...