கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு
நீடிக்கும் என்றே தெரிகிறது. அதே நேரத்தில் பாதிப்பு குறைவான இடங்களில்
ஊரடங்கு படிப்படியாக தளா்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 10 நாட்களாக 7 மாவட்டங்களில் புதிதாக
பாதிப்பு இல்லை. அதாவது, நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட
மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக புதிய தொற்று கண்டறியப்படவில்லை.
நீலகிரியில் 16 நாட்களாகவும், ராணிப்பேட்டையில் 14 நாட்கள்,
கன்னியாகுமரியில் 13 நாட்கள், ஈரோட்டில் 12 நாட்கள், வேலூர், கரூர், தேனி
ஆகிய மாவட்டங்களில் 10 நாட்களாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தமிழக
சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் 14 நாட்கள் புதிதாக
தொற்று கண்டறியப்படவில்லை என்றால், அந்தப்பகுதி ரெட் ஸோனில் இருந்து ஆரஞ்ச்
ஸோனாக மாற்றப்படும்.ஏற்கனவே நீலகிரியில் மொத்தம் 9 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரியில் 16 பேர் பாதிப்பு. ரெட் ஸோனில் இருக்கும் ராணிப்பேட்டை,
கன்னியாகுமரி, ஈரோடு, வேலூர், கரூர், தேனி ஆகிய மாவட்டங்கள் ஆரஞ்ச்
ஸோனுக்கு மாற்றப்படும் என தெரிகிறது. அப்படி மாற்றப்பட்டால் ஊரடங்கில்
இருந்து தளர்வு கிடைக்கும். அதாவது கடைகள் திறந்திருக்க அனுமதி,
கட்டுப்பாடுகளுடன் பயணம் மேற்கொள்ளலாம் உள்ளிட்ட அனுமதி கிடைக்க வாய்ப்பு
உள்ளது.பாதிப்பு 20க்கும் குறைவாக உள்ள அரியலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி,
காஞ்சிபுரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை,
திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்படும்
என தெரிகிறது. சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில்
ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...