15 வகையான மூலிகைகளின் கூட்டுக் கலவையான கபசுரக் குடிநீர் என்பது பல காலமாகவே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருந்து. இருமல், காய்ச்சல், சளி ஆகியவற்றுக்காக நாம் பயன்படுத்தி வருகிறோம். கோவிட் 19 சுவாச மண்டலத்தைத் தாக்குகிறது. அதன் எதிரொலியாக இருமல், காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் அறிகுறிகளாக வெளிப்படுகின்றன. அதனால்தான் கபசுரக் குடிநீரைப் பயன்படுத்த இப்போது எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். கபசுரக் குடிநீர் எல்லோருக்கும் அவசியமில்லை கபசுரக் குடிநீரை எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை.
இப்போது அரசாங்கமே கொரோனாவைத் தடுக்க 'வீட்டிலேயே இருங்கள்' என்று அறிவுறுத்தி வருகிறது. அதனால் ஒரு கணக்குக்காக வைத்துக் கொண்டால், 80 சதவிகித வீட்டில் இருக்கும் மக்களுக்கு கபசுரக் குடிநீர் அவசியமில்லை. அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியிடங்களுக்குச் செல்கிறவர்கள், களத்தில் பணிபுரியும் காவல் துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், மருத்துவப் பணியில் இருப்பவர்கள் கபசுரக் குடிநீரைப் பயன்படுத்தலாம்.கபசுரக் குடிநீர் மட்டுமே நிவாரணம் இல்லைகபசுரக் குடிநீர் ஒன்றுதான் கொரோனாவுக்கு மருந்து என்பதில்லை. இதுபோல் எண்ணற்ற மருந்துகள் நம் சித்த மருத்துவத்தில் இருக்கிறது. எல்லோரும் கபசுரக் குடிநீர் மருந்து என்று தேடி அலையும்போது அதற்கான டிமாண்ட் அதிகமாகும். டிமாண்ட் அதிகரிக்கும்போது தானாகவே அதன் விலையும் அதிகரிக்கும். கலப்பட கபசுரக் குடிநீர் தயாரிப்பு பாக்கெட்டுகளும் விற்பனைக்கு வரும். எனவே, எல்லோரும் கபசுரக் குடிநீர் என்று தேடி அலைய வேண்டியதில்லை.
எளிதான வைரஸ் தடுப்பு மருந்து
உலகிலேயே மிகச்சிறந்த வைரஸ் எதிர்ப்பு மருந்து வேப்பிலையில் இருக்கிறது, மஞ்சளில் இருக்கிறது, சீரகத்தில் இருக்கிறது, மிளகில் இருக்கிறது. இந்த நான்கையும் வைத்தே சிறந்த வைரஸ் எதிர்ப்பு மருந்தைத் தயாரிக்கலாம்.வேப்பங்கொழுந்தினை கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு, அரை டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து, தலா கால் ஸ்பூன் அளவு மிளகு பொடியையும், சீரகப் பொடியையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அதை பெரியவர்கள் அரை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டாலே போதும். எந்த வைரஸ் தாக்கமும் ஏற்படாது.
குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில் நெல்லிக்க்காய் அளவு சாப்பிட்டால் போதும்.ஆய்வுகளை அரசு முன்னெடுக்க வேண்டும்கபசுரக் குடிநீர் பற்றி ஆராய்ச்சிகள் தேவை. கொரோனாவுக்கு என்று இதுவரை எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனெனில், ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிகள் குறிப்பிட்ட ஒரு துல்லியமான புள்ளியை நோக்கி செயல்படுபவை.கபசுரக் குடிநீர் பற்றி பேசினால் அதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். இதற்கான முன்னெடுப்பை அரசாங்கம்தான் செய்ய வேண்டும். உலகமே கொரோனா விஷயத்தில் கையைப் பிசைந்துகொண்டு இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு அலோபதியைத் தவிர வேறு வழி வகை தெரியவில்லை. ஆனால், இந்திய மருத்துவம் அப்படியில்லை. நம்மிடம் பாரம்பரியமிக்க மூலிகைகள் இருக்கின்றன.அந்த மூலிகைகளினால் கிடைக்கும் இறுதியான பலன் என்னவென்பதையும் சித்த மருத்துவர்கள் உறுதியோடு கூறுகிறார்கள்.
எண்ட் ரிசல்ட்டைத் தேடி அலோபதி ஆராய்ச்சிகள் செல்கின்றன. ஆனால், சித்த மருத்துவம் எண்ட் ரிசல்ட்டை கையில் வைத்திருக்கிறது. அந்த முடிவை வைத்துக் கொண்டு அறிவியல் ரீதியான ஆராய்ச்சியை அரசாங்கம்தான் செய்ய முடியும். ஒரு சித்த மருத்துவரோ, ஒரு தனியார் அமைப்போ செய்ய முடியாது. ஒரு தனிப்பட்ட அமைப்பு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தாலும் அதற்கு காப்புரிமை பெற முடியாது. உதாரணத்துக்கு ஏற்கெனவே மஞ்சள் விஷயத்தில் இந்த குழப்பம் வந்தது.வேப்பிலை ஒரு வைரஸ் எதிர்ப்புப் பொருள் என்று கண்டுபிடிப்பதால் ஒருவர் வேப்பிலைக்கான காப்புரிமையைக் கோர முடியாது. இதனால்தான் சித்த மருத்துவத்தில் சிகிச்சைகள் இருந்தும் அவற்றை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. அரசாங்கமே ஆய்வு செய்து நிரூபித்தால், காப்புரிமையை வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் அரசுக்கு வருமானமும் கிடைக்கும். உலகத்துக்கே ஒரு பிரச்னை என்று வரும்போது இந்தியா தன்னுடைய பங்களிப்பை செய்து உதவியும் செய்ய முடியும்.பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம்க்யூபா போன்ற ஒரு குட்டி நாடு எப்படி தன்னையும் காத்துக் கொண்டு உலகுக்கும் உதவுகிறது என்பதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். சீனா எப்படி இதுபோல் ஒரு மோசமான பாதிப்பிலிருந்து மீண்டு வந்தது என்பதை கவனிக்க வேண்டும்.
தங்களுடைய பாரம்பரிய சீன மருத்துவத்தில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள் சீனர்கள். அதுவும் முக்கிய காரணமாக இருக்கலாம். சீனா ஒரு வெளிப்படையான நாடு இல்லை. அதனால் அவர்களிடம் இருந்து முழுமையான பதிலை எதிர்பார்க்க முடியாது. ஆனால், பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்தி மீண்டு வந்திருப்பார்கள் என்று யூகிக்கலாம். ஏற்கெனவே கொடுக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவ சிகிச்சையுடன் கபசுரக் குடிநீரையும் ஒரு சப்போர்ட்டிவ் மருந்தாகக் கொடுக்கலாம். இதனால் விரைவிலேயே குணமடையவும் சாத்தியம் ஏற்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...