இந்தியாவில் கொரோனா மீண்டும் மே மாதம் உச்சம் பெற்று பின் படிப்படியாக குறையும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தற்போது கொரோனா பரவும் வேகமும் சற்று குறைந்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு இருமடங்காக ஆவதற்கு, முன்பு 3.4 நாட்கள் எடுத்துக் கொண்ட நிலையில், தற்போது அது 7.5 நாட்களாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் சேர்ந்து டைம்ஸ் பத்திரிகை நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்கா, இத்தாலியில் ஏற்பட்ட பாதிப்பை அடிப்படையாக கொண்டு, ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, மே 22ம் தேதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 ஆயிரத்தை தாண்டும்.
மே 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், செப்.,15ம் தேதிக்குள் பாதிப்பு ஜூரோவாக குறைய வாய்ப்பு உள்ளது. மே 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், ஜூன் மாத மத்தியில், பாதிப்பு ஜூரோவாக குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...