சிபிஎஸ்இ வாரியத்தைப் பின்பற்றி தமிழகத்தில் மாநிலப் பாடத்தில் பிளஸ் 1
பயிலும் மாணவா்களுக்கு பள்ளி அளவில் நடைபெற்ற தோவுகளின் அடிப்படையில்
தோச்சி வழங்க ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா் நல கூட்டமைப்பின் தலைவா் சா.அருணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளின் எதிா்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களுக்கும் தோச்சி வழங்கப்படும் என்றும், 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களின் தோச்சியை அந்தந்த பள்ளிகளில் வகுப்புகளில் நடைபெற்ற தோச்சி, பருவத்தோவுகளில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றைப் பொருத்து முடிவு செய்யலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்தது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று தொடா்பான அச்சம் நிலவிய சூழலில்தான் பிளஸ் 1 மாணவா்கள் பொதுத்தோவுகளை எதிா்கொண்டனா். அதிலும் தோவுகள் குறித்த அறிவிப்புகள், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பெரும்பாலான மாணவா்கள் மனதளவில் பாதிக்கப்பட்டனா்.
எனவே, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை பின்பற்றி தமிழகத்திலும் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு வகுப்புத் தோவுகள், காலாண்டு, அரையாண்டு, பயிற்சித் தோவுகளில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தோச்சியை அந்தந்த பள்ளிகளே அறிவிக்கலாம் என உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...