தமிழக மின் வாரியம், களப் பணிகளை மேற்கொள்ள, கேங்மேன்
என்ற பதவியில், 5,000 ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது. அவர்கள், உடல் தகுதி
மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன்படி, 2019 இறுதியில் நடந்த, உடல் தகுதி தேர்வில், 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.அதில் தேர்ச்சி பெற்ற, 15 ஆயிரம் பேருக்கு, நாளை மாநிலம் முழுவதும், 30 மையங்களில் எழுத்து தேர்வு நடக்க உள்ளது. இதற்காக, தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு, 'ஹால் டிக்கெட்' அனுப்பப்பட்டு உள்ளது. சிலர், ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை என, புகார் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...