பாசிப் பயறில் வைட்டமின் பி9 அதிகளவில் காணப்படுகின்றன. மேலும் இதில் வைட்டமின் பி5, பி6, பி2, வைட்டமின் சி, ஏ ஆகியவையும் உள்ளன.
இதில் தாது உப்புக்களான செம்புத்சத்து, இரும்புச்சத்து பாஸ்பரஸ் ஆகியவை
மிக அதிகளவும், மெக்னீசியம், மாங்கனீசு ஆகியவை மிக அதிகளவும்,
காணப்படுகின்றன.
பாசிப் பயறில் காணப்படும் என்சைம்கள், ஊட்டச்சத்துக்கள்,
ஆன்டி-ஆக்ஸிஜெண்டுகள் ஆகியவை உடல்நலத்தை பாதுகாக்கின்றன. இப்பயறானது
கண்கள், கேசம், நகங்கள் கல்லீரரால், சருமம் ஆகியவற்றின் நலத்தை
மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது.
பாசி பயறானது செரிமானத்தை மேம்படுத்த தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.இப்பயறில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் குடலில்
உணவுப்பொருட்கள் நன்கு செரிக்க உதவுகிறது. மேலும் இது செரிமானப் பாதையில்
நல்ல பாக்டீரியாக்களின் செயலினை துரிதப்படுத்தி உணவினை நன்கு செரிக்க
உதவுகிறது.
பாசிப் பயிறில் காணப்படும் கார்போஹைட்ரேட் எளிதில் செரிமானம் அடையும்
தன்மையைக் கொண்டுள்ளது. இப்பயறில் காணப்படும் புரதச்சத்தானது இரத்த
அழுத்தத்தை உயர்த்தக் கூடிய என்சைம்களின் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன.
எனவே பாசிபயறினை அடிக்கடி உணவில் சேர்த்து இரத்த அழுத்தத்தைச் சீராக்கலாம்.
பாசி பயறில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் கெட்ட கொழுப்புகள் உடலில்
சேருவதைத் தடை செய்கின்றன. பக்கவாதம், மாரடைப்பு போன்றவற்றிற்கு கெட்ட
கொழுப்புகளின் செயல்பாடுகள் முக்கிய காரணமாகும்.
கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம்.
எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று
சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு
சிறந்த ஊட்டச்சத்துணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அழகு சாதனப்பொருட்களில் குளிக்கும்போது பாசிப்பயறு மாவு தேய்த்துக்
குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால்
பொடுகுத் தொல்லை நீங்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...