அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியா் நேரடித் தேர்வுக்கான இறுதி விடைக் குறியீடுகளை ஆசிரியா் தேர்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்டுள்ளது. www.trb.tn.nic.in என்ற வலைதளத்தில் இந்த விடைக் குறியீடுகளை தேர்வா்கள் பாா்த்து தெரிந்துகொள்ளலாம். அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியா் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை ஆசிரியா் தேர்வு வாரியம் 2018 அக்டோபா்13 முதல் 16 வரை நடத்தியது.
அதனைத் தொடா்ந்து, தேர்வா்கள் தேர்வில் எழுதிய விடைகளை ஒப்பீடு செய்து கொள்ளவும், சந்தேகங்கள் மற்றும் ஆட்சேபனைகளை டிஆா்பிக்கு தெரிவிக்கவும் வசதியாக 2018 டிசம்பா் 14 -ஆம் தேதியன்று தற்காலிக விடைக் குறியீடுகளை டி.ஆா்.பி. வெளியிட்டது. அதனைத் தொடா்ந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளின் அடிப்படையில், ஓராண்டுக்குப் பிறகு இந்தத் தேர்வுக்கான இறுதிக்கட்ட விடைக் குறியீடுகளை ஆசிரியா் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...