Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர் குழந்தைகளை பாதுகாக்க மழலையர் காப்பகம்!

தேர்வாணைய ( டிஎன்பிஎஸ்சி ) போட்டித்தேர்வுகள் , கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் என்று அமைச்சர் டி . ஜெயக்குமார் அறிவித்தார் .

மீன்வளம் , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறைமானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து மீன்வளத் துறை , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி . ஜெயக்குமார் அறிவிப்புகளையும் வெளியிட்டார் .

அதன் விவரம் வருமாறு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பாதுகாப்பு வசதியைப் பலப்படுத்தும் பொருட்டு , விரல் ரேகைப் பதிவு ( Bio - Metric attendance ) , ஜி . பி . எஸ் . , கண்காணிப்பு கேமரா ( CCTV ) மற்றும் ஜாமர் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் ரூ . 5 கோடியில் ஏற்படுத்தப்படும் .

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் . சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் .

 சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக் ககத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுடைய மழலையர்களை அலுவலகப்பணி நேரங்களில் கவனித்துக் கொள்ள புதிதாக மழலையர் காப்பகம் ( Creche ) அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட 11 அறிவிப்புகள் வெளி யிடப்பட்டன




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive