நீட் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தைத் திருத்த இன்றே கடைசி நாள் ஆகும்.
பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தைத் திருத்த, தேசியத் தேர்வுகள் முகமை மாணவர்களுக்குக் கடைசி வாய்ப்பை அளித்துள்ளது. இதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது.
https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் மீண்டும் தங்களின் விண்ணப்பப் படிவத்தைத் திருத்திக்கொள்ளலாம் அல்லது சரிபார்த்துக் கொள்ளலாம்.
தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடைபெற உள்ளது. மே 3, 2020-ல் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை 3 மணிநேரம் தேர்வு நடைபெறும். கருப்பு பால் பாயிண்ட் பேனா கொண்டு சரியான விடை உள்ள வட்டத்தை நிரப்ப வேண்டும். தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் மட்டும் தேர்வு நடைபெறும்.
தேர்வு அனுமதிச் சீட்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...