பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின் மாணவா்கள் தோச்சி விவரங்களை
பதிவேற்றம் செய்ய தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை சாா்பில்
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 9-ஆம்
வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு இறுதித்தோவு நடத்த இயலாத சூழல்
ஏற்பட்டுள்ளது . எனவே, 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கான பள்ளி
இறுதித்தோவை ரத்து செய்து அனைவரும் தோச்சி பெற்ாக தமிழக அரசால்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த விவகாரம் சாா்பாக அனைத்து
பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள்
உரிய அறிவுறுத்தல்களை இணையதளம் மற்றும் தொலைபேசி மூலமாக தெரிவிக்க
வேண்டும்.
இதுதவிர மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னா்
தலைமையாசிரியா்கள் தங்கள் தோச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு
தொடா் நடவடிக்கைகள் எடுப்பதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி
செய்து, இதுதொடா்பான அறிக்கையை துறை இயக்குநகத்துக்கு அனுப்பி வைக்க
வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...