தேர்வுப்பணி :
அறை கண்காணிப்பாளர் பணி:
அறை கண்காணிப்பாளர் தேர்வு தொடங்குவதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்தாக வந்து தனக்கு எந்த அறை என்பதை குலுக்கல் சீட்டு மூலம் தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் உள்ள மாணவர்களின் விடைத்தாள்களை தன் கரங்களால் தொட்டு பரிசோதிக்க வேண்டும். ஒரு அறைக்கு 20 மாணவர்கள் வீதம் ஒரு மாணவருக்கு 32 பக்கம் என கிட்டத்தட்ட 640 பக்கங்களை ஒரு அறை கண்காணிப்பாளர் பரிசோதிக்க வேண்டும். அதேபோல் தேர்வு தொடங்குவதற்கு முன் வினாத்தாள்களை அறை கண்காணிப்பாளர் தன் அறையிலுள்ள 20 மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும். அடுத்து முகப்புச் பக்கத்தில் கையொப்பம் இடுவது, வருகை பக்கத்தில் சம்பந்தப்பட்ட மாணவரை கையெழுத்து வாங்குவது என்று கிட்டத்தட்ட 700 பக்கங்கள் வரை ஒரு அறை கண்காணிப்பாளரும் தொட வேண்டியிருக்கும். அறைக் கண்காணிப்பாளர் தொட்ட பக்கங்களை மாணவர்கள் தொட வேண்டியிருக்கும்.
தேர்வு முடிந்த பிறகு மாணவர்களிடமிருந்து விடைத்தாட்களை பெற்று வந்து முகப்பு பக்கத்தில் ஒரு பகுதியை இரும்பு அளவுகோல் வைத்து கிழித்து எடுக்க வேண்டும் அதுபோல மாணவர்கள் எதுவரை எழுதியிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு பக்கமாக புரட்டி பார்த்து மாணவர்கள் கடைசியாக எழுதிய பக்கத்தில் சீல் இடும் பணியும் செய்ய வேண்டும்.
இப்படியாக அறை கண்காணிப்பாளரும் மாணவரும் என மாறி மாறி பக்கங்களை தொட வேண்டிய சூழல் இந்த தேர்வு முறையில் தவிர்க்க முடியாதது.
முதன்மை கண்காணிப்பாளர் மற்றும்
துறை அலுவலர்களின் பணி :
தேர்வு தொடங்கிய பிறகு மீதமுள்ள வினாத்தாள்கள் எண்ணி பீரோவில் வைத்து சீல் இடுவது
அறை கண்காணிப்பாளர்கள் கொண்டு வந்து தரும் விடைத்தாள்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று எண்ணிப் பார்ப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டி வரும்.
எழுத்தர் பணி :
இவர் பல்வேறு படிவங்களை தயார் செய்வது சம்பந்தப்பட்டவர்களிடம் கையொப்பம் வாங்குவது , விடைத்தாள்கள் அடங்கிய கட்டுகளை தைத்து சீலிடுவது போன்ற பணிகளை மேற்கொள்வார்.
வழித்தட அலுவலர் :
வழித்தட அலுவலர் தனக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் காலையிலேயே வினாத்தாள் அடங்கிய சிப்பங்களை வழங்குவதும் வழங்கியதற்கான கையெழுத்தை ஒற்றை படிவத்தில் முதன்மை கண்காணிப்பாளர் இடமும் துறை அலுவலர்களிடம் வாங்க வேண்டும். ஒரே படிவம் தான் அனைத்து மையங்களுக்கும் பயன்படுத்தப்படும் குறிப்பாக ஐந்து மையங்கள் இருக்கிறது எனில் 11 பேருடைய கரங்கள் அந்த ஒரே தாளில் பட வேண்டியிருக்கும்.
அதேபோல் தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கள் அடங்கிய கட்டுகளை வாங்கிக்கொண்டு அதில் ஒரு படிவத்தில் துறை அலுவலர்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டு துறை அலுவலர் வைத்திருக்கும் ஒரு படிவத்தில் கையொப்பம் இட்டுவிட்டு இன்னும் மற்ற இரண்டு படிவங்களை துறை அலுவலரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இதேபோல் அனைத்து மையங்களிலும் பெற்றுக்கொண்டு விடைத்தாள்கள் அடங்கிய கட்டுகளை கல்வி மாவட்டத்திற்கு ஒன்று என செயல்படும் விடைத்தாள்கள் சேகரிப்பு மையத்தில் தொடர்பு அலுவலரின் முன்னிலையில் கொண்டு சேர்க்க வேண்டும். இங்கேயும் சில பக்கங்களில் கையொப்பமிட வேண்டும்.
விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் வழித்தட அலுவலர்கள் கொண்டுவந்து சேர்த்த விடைத்தாள் கட்டுகளை பிரித்து அதிலிருந்து விடைத்தாட்களை எடுத்து suffling செய்து புதிய உறையில் இடம் பணியை பல ஆசிரியர்கள் அடங்கிய குழு ஒன்று மேற்கொள்ளும்.
மத்திய மாநில அரசுகள் சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்துவதோடு பொருட்களை தொடும் பொருட்டு கை கழுவிடவும் வலியுறுத்துகிறது. இவை இரண்டுமே இந்த தேர்வு முறையில் சாத்தியமற்றதாய் இருக்கிறது.
தமிழக அரசே மேனிலை பொதுத்தேர்வை உடனடியாக ஒத்திவை செல்மா பிரியதர்ஸன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...