ஒருங்கிணைந்த பள்ளி கல்விதிட்டத்தின்கீழ்தமிழக ஆசிரியர்கள் 1200பேர்திருவ னந்தபுரத்திற்குகளப்பயண மாக அழைத்து செல்லப்பட இருக்கின்றனர் . ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் 2019 - 20ம் கல்வியாண்டில் ' குவாலிட்டி கம்போனென்ட்ஸ் - - செகண்டரி அன்ட் சீனியர் செகண்டரி ' என்ற தலைப்பில் அரசு பள்ளிகளில் இடைநிலை , மேல்நிலை பயிற்றுவிக்கும் அறிவியல் மற்றும் கணித பட்டதாரி , முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் களப்பயணம் மேற்கொள்ளும் வகையில் ' டீச்சர் எக்சேஞ்ச் புரோகிராம் ' என்ற செயல்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
இதற்காக ஒரு கல்வி மாவட்டத்திற்கு 10 ஆசிரி யர்கள் வீதம் 120 மாவட் டங்களில் இருந்தும் மொத்தம் 1200 ஆசிரியர்க ளுக்கு மொத்தம் ரூ . 24 லட்சம் நிதி அனுமதிக்கப் பட்டு மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது . இதற்காக ஒரு கல்வி மாவட்டத்திற்கு 6 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 4 முதுகலை பட்டதாரி ஆசிரியர் கள் என்று 101 ஆசிரியர்கள் வீதம் 120 கல்வி மாவட்டங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 200 ஆசிரியர்கள் தெரிவு செய் யப்பட்டுள்ளனர் .
இவ்வாசிரியர்கள் நேரடி களப்பயணம் மேற் கொள்ளத்தக்க தேசிய விண்வெளி ஆய்வு மையம் , அருங்காட்சியகங் கள் மற்றும் பயிற்சி அரங் கம் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய கேரள மாநிலம் , திருவ னந்தபுரம் அழைத்து செல் லப்பட உள்ளனர் . இந்த களப்பயணத்தின்போது விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த சிறப்பு வகுப்புக ளும் வல்லுநர்களால் நடத் தப்பட உள்ளது . இந்த செயல்பாடு மத்திய அரசு நிறுவனமான ஐஆர்சிடிசி உடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது .
இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...